Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IL JIN Electronics ரூ.2,500 கோடி ஐபிஓவுக்கு விண்ணப்பம்

IL JIN Electronics ரூ.2,500 கோடி ஐபிஓவுக்கு விண்ணப்பம்

சென்னை, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இந்தியாவில் 10 ஆலைகளும், இஸ்ரேலில் ஓர் ஆலையும் உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஆம்பர் என்டர்பிரைசஸ் இந்தியாவின் துணை நிறுவனமான இல் ஜின் எலெக்ட்ரானிக்ஸ், புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.2,500 கோடி திரட்ட செபியிடம் வரைவு ஆவணத்தைத் தாக்கல் செய்துள்ளது.

நவம்பர் 6 தேதியிட்ட வரைவு ஆவணத்தின்படி, ஐபிஓவில் ரூ.2,500 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் மட்டுமே வெளியிடப்படும். தற்போதைய பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்கும் திட்டம் இதில் இடம்பெறவில்லை.

திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி, இல் ஜின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான அசென்ட் சர்க்யூட்ஸ், ஷோகினி டெக்னோஆர்ட்ஸ் ஆகியவற்றின் கடன்களை வட்டியுடன் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும். உற்பத்தி ஆலைகளுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கவும், பொது நிறுவனச் செலவுகளுக்கும் நிதி பயன்படுத்தப்படும்.

மின்னணு சாதன உற்பத்திச் சேவை, அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகை தயாரிப்பு, மின் மின்னணுவியல், தொழில்துறை தானியக்கம் ஆகிய நான்கு பிரிவுகளில் நிறுவனம் செயல்படுகிறது.

சென்னை, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இந்தியாவில் 10 ஆலைகளும், இஸ்ரேலில் ஓர் ஆலையும் உள்ளன. உற்பத்தித் திறனை விரிவுபடுத்த மேலும் ஆறு ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2023–24 நிதியாண்டில் ரூ.1,240.41 கோடியாக இருந்தது. இது 2025–26 நிதியாண்டில் ரூ.3,268.47 கோடியாக உயர்ந்தது. இதே காலத்தில் வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்டவற்றுக்கு முந்தைய லாபம் (EBITDA) ரூ.71.42 கோடியிலிருந்து ரூ.321.07 கோடியாக அதிகரித்தது.

மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், ஜெஃபரீஸ் இந்தியா ஆகியவை பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. கேஃபின் டெக்னாலஜீஸ் பதிவாளராகச் செயல்படும்.

முந்தைய செய்தி
கார்டிரேட் டெக் பங்குகள் ரூ.470 கோடிக்கு விற்பனை
அடுத்த செய்தி
AI டேட்டா சென்டர்களால் இரு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்